உதயநிக்கு ஜோடியான பிரபல நடிகரின் மனைவி
திருவல்லிக்கேணி -சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏவும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ள படத்தில் இணைந்துள்ளார் பிரபல நடிகரின் மகள்.
இந்தியில் ஆயூஸ்மான் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க கனா இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். அந்த படம் தேர்தல் காரணமாக தொடங்கப்படாமல் இருந்த நிலையில் இப்போது படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இந்த படத்தை போனி கபூர் தயாரிக்க, கனா இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்க உள்ளார்.
இந்நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் நடிகைகள் பற்றிய விவரம் சமீபத்தில் வெளியானது. அதில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான சிவாங்கி ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதையடுத்து, பிக்பாஸ் பிரபலம் இப்படத்தில் இணைந்துள்ளார். நடைபெற்று முடிந்த பிக்பாஸ் சீசனில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்ட ஆரி, உதயநிதியுடன் இணைந்து நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆர்டிக்கில் 15 படத்தில் உதயநிதிக்கு ஜோடியக தெலுங்கு பட நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி நடிப்பது உறுதியாகியுள்ளது. நடிகை ஷிவானி வருகையால் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.