அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்தரன் ? பின்னணி என்ன ?

Last Modified ஞாயிறு, 17 மார்ச் 2019 (10:36 IST)
நேற்று இரவு 10 மணிக்கு சுசீந்தரன் பற்றவைத்த நெருப்பொன்று சமூக வலைதளங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.

நேற்று இரவு 10 மணிக்கு அஜித்தை அரசியலுக்கு வருமாறு இயக்குனர் சுசீந்திரன் டிவிட்டரில் அழைப்பு விடுத்து நெருப்பு ஒன்றைப் பற்றவைத்தார். அஜித்தும், அவரது ரசிகர்களும் அரசியலே வேண்டாம் என ஒதுங்கி நிற்கும் நிலையில் இந்த அழைப்பு சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகி வருகிறது. சுசீந்தரனி டிவிட்டில் ‘40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறே. இதுதான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு. உங்களுக்காக காத்திருக்கும் பலகோடி மக்களில் நானும் ஒருவன்’ எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சமூக வலைதளங்களில் உள்ள அஜித் ரசிகர்கள் சுசீந்தரனுக்குக் கடுமையானப் பதிலடி கொடுத்து வருகின்றனர். பல வருடங்களாக அஜித்துக்காக தான் கதை ஒன்றைத் தயார் செய்து வைத்துள்ளதாகவும் ஆனால் அவரை சந்திக்க கூட முடியவில்லை என்றும் சுசீந்தரன் பல பேட்டிகளில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் எந்தவொருப் பொது விஷயத்திலும் கலந்துகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்து வருகிறார். இதனால் அஜித்தைக் கிண்டல் செய்யும் விதமாக சுசீந்தரன் இந்த டிவிட்டை செய்திருக்கலாம் எனவும் கருத்துகள் எழுந்துள்ளன.

மேலும் சுசீந்தரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியானப் படங்கள் எதுவும் சமீபகாலமாக பெரியளவில் ஹிட் ஆகவில்லை. அதனால் தனது அடுத்தப்படத்திற்கு விளம்பரம் தேடும் விதமாக சுசீந்தரன் இவ்வாறு கீழ்த்தரமான வேலைகளை செய்கிறார் எனவும் அஜித் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எது எப்படியோ சுசீந்தரன் அஜித்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு செயலை செய்துள்ளார். இதன் பிறகு அஜித்திடம் இருந்து என்ன எதிர்வினை வரும் என்பதைக் காண அனைவரும் ஆவலாக உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :