1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (11:21 IST)

சுதா கொங்கரா & சிவகார்த்திகேயன் இடையே கருத்து வேறுபாடா?

சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் சூர்யாவின் தலையீட்டால் கைவிடப்பட்டது.  அந்த கதை இந்தி திணிப்பு எதிர்ப்பைப் பற்றிய படம் என்பதால் அதில் நடிக்க சூர்யா தயங்கியதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சூர்யா நேரடி இந்திப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் அதே கதையை சிவகார்த்திகேயனை வைத்து டான் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக சுதா கொங்கரா இயக்க உள்ளார். அது சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான போட்டோஷூட் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்காக படத்துக்கு ஒரு வித்தியாசமான கெட்டப்பில் சிவகார்த்திகேயன் இருக்க வேண்டும் என சுதா கொங்கரா விரும்பியுள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்து வருவதால் தன்னால் கெட்டப் மாற்ற முடியாது என சொல்லிவிட்டாராம். இது சம்மந்தமாக இருவருக்கும் இடையே ஒரு கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.