புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 29 நவம்பர் 2024 (14:56 IST)

சர்தார் 2 படத்துக்காக கெட்டப்பை மாற்றும் எஸ் ஜே சூர்யா!

கார்த்தி நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கி 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சர்தார்.  இந்த படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரி, உளவாளி என இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் ஹிட் அடித்தது. கார்த்தியின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதனால் இப்போது சர்தார் 2 படம் தொடங்கியுள்ளது. படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்துக்காக 1970 களில் பயன்பாட்டில் இருந்த விமானம் ஒன்று சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்துக்குள் பல முக்கியமானக் காட்சிகளை இயக்குனர் படமாக்கவுள்ளாராம். படம் வெளியாகும் போது இதில் படமாக்கப்படும் காட்சிகள் பேசுபொருளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கும் எஸ் ஜே சூர்யா சீன உளவாளியாக நடிக்கிறாராம். அதனால் அந்த தோற்றத்துக்காக எஸ் ஜே சூர்யா ஒரு சீனர் போல தோற்றமளிக்க கெட்டப்பை மாற்றியுள்ளாராம். அவரது கெட்டப் படம் ரிலீஸாகும் போது பெரியளவில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.