வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 20 பிப்ரவரி 2020 (11:20 IST)

செட்டில் இருந்த ஷங்கர், காலில் விழுந்த க்ரேன்... உண்மை நிலவரம் என்ன??

இந்திய 2 படபிடிப்பு விபத்தில் இயக்குனர் ஷங்கருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. 
 
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடித்து வரும் படம் ‘இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் நேற்று இரவு நடந்து வந்தது. அப்போது 150 அடி உயர க்ரேன் கீழே விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். 
 
மேலும், 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்திக்கு நடிகர் கமல் தனது ஆழ்ந்த இறங்கலை தெரிவித்துள்ளார். 
 
இந்நிலையில் சமூக வலைத்தள பக்கங்களில் இயக்குனர் ஷங்கருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது, சம்பவத்தின் போது செட்டில் இருந்த அவர் மீது கிரேன் விழுந்ததில் அவரது கால எலும்பு முறிந்துள்ளது என செய்திகள் வெளியாகி வருகின்றனர். 
 
இதில் உண்மை என்னவெனில் ஷங்கர் செட்டில் இருந்தது உண்மை தான் ஆனால் அவருக்கு கால் முறிவு போன்ற ஏதும் ஏற்படவில்லை. அவர நலமாகவே உள்ளார் என சில நெருங்கியவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.