திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 3 ஆகஸ்ட் 2022 (15:15 IST)

ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைக்கு செல்கிறதா துருவ நட்சத்திரம்? லேட்டஸ்ட் தகவல்!

துருவ நட்சத்திரம் படத்தின் டப்பிங் பணிகளில் தற்போது விக்ரம் ஈடுபட்டு வருகிறார்.

விக்ரம் நடிப்பில் இப்போது மகான், கோப்ரா, பொன்னியின் செலவன் ஆகிய படங்கள் உருவாக்கத்தில் உள்ளன. இவை இல்லாமல் துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இப்போது மகான் மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்ததாக கோப்ரா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார்.

அந்த படத்தை முடித்தபின் தனது சிகையலங்காரத்தை மாற்றிவிட்டு, பல ஆண்டுகளாக இழுத்தடித்துக் கொண்டிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் நடிப்பார் என சொல்லப்படட்து. இந்நிலையில் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த விக்ரம் 15 நாட்கள் தேதிகள் ஒதுக்கியதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது இயக்குனர் கௌதம் மேனன் – விக்ரம் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர். மேலும் விக்ரம் இதுவரையிலான துருவ நட்சத்திரம் காட்சிகளுக்கு டப்பிங் பேசி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தை முடித்து ரிலீஸ் செய்வதற்காக ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை அணுகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மற்றொரு தகவலாக நெட்பிளிக்ஸை அணுகி படத்தை முடிப்பதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.