வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (16:30 IST)

மாதவன் இயக்கி நடிக்கும் ராக்கெட்ரி படத்தை வாங்கியுள்ளாரா கமல்?

நடிகர் மாதவன் நீண்டகாலமாக இயக்கிவரும் ராக்கெட்ரி படத்தின் விநியோக உரிமையை கமல்ஹாசன் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கேரக்டரில் மாதவன் நடிக்கும் 'ராக்கெட்டரி' என்ற படம் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது.  இந்த படத்தை நடிகர் மாதவனே இயக்கியும் வந்தார். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து இப்போது ரிலிஸுக்கு தயாராக உள்ளது. ரிலிஸூக்கு சரியான நேரம் பார்த்து காத்திருக்கிறார் மாதவன்.

இந்நிலையில் இந்த படத்தை தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் வாங்கி வெளியிட கமல் உத்தேசித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கமல் அரசியலில் நுழைந்தபின்னர் தன்னுடைய ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் மற்ற நடிகர்களின் படங்களை தயாரிப்பேன் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.