அமீர்கான் படத்தில் ஷாருக்கும் சல்மான் கானும் – பின்னணி என்ன?

Last Modified வெள்ளி, 20 நவம்பர் 2020 (15:45 IST)

நடிகர் அமீர்கான் நடித்து வரும் லால் சிங் லட்டா படத்தில் ஷாருக் கான் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் நடிக்க உள்ளனர்.

அமீர்கான், ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் நடந்து வருகின்றன. இந்த படம் ஒரு நபரின் பல்வேறு காலகட்டங்களில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது.

அதையொட்டி இந்த படத்தில் 90 களின் இந்தி சினிமாவும் ஒரு கதாபாத்திரம் போன்றே உருவாக்கப்பட்டுள்ளதாம். அதனால் அதில் அமீர்கானின் சக போட்டியாளர்களான ஷாருக் கான் மற்றும் சல்மான் கான் ஆகியோர் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனராம். மேலும் அந்த பகுதிகளை அமீர்கானே இயக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.இதில் மேலும் படிக்கவும் :