கருணாநிதியை சந்திக்கின்றாரா நடிகை ஓவியா?
திமுக தலைவர் கருணாநிதி கடந்த ஆறு நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ரஜினி, கமல், அஜித், விஜய் உள்பட கிட்டத்தட்ட அனைத்து சினிமா நட்சத்திரங்களும் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் மூலம் கோடிக்கணக்கானோர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை ஓவியா, 'திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் பெற வேண்டுகிறேன்' என்று கூறியுள்ளா.ர் மேலும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு பதிலளித்த நடிகை ஓவியா அதற்கு 'நான் அரசியல்வாதி இல்லை' என்று பதிலளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க கோலிவுட் திரையுலகில் இருந்து பலர் காவேரி மருத்துவமனைக்கு வந்தபோதிலும் குறிப்பிடத்தக்க நடிகைகள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.