தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வர அதிக வாய்ப்பு ?
தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு இரவு நேர ஊரடங்கு அல்லது முழு நேர ஊரடங்கு போட வாய்ப்பு எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மீண்டும் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஜனவரி 15ஆம் தேதிக்கு மேல் 15,000 ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னையில் பாதிப்பு 5,000 தாண்டும் என சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டாயம் தீவிரமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.