1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : புதன், 17 மே 2023 (17:16 IST)

திரிஷாவால் கார்த்திக்கும் மனைவிக்கும் விவாகரத்தா? பகீர் கிளப்பிய பயில்வான்!

மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட பலர் நடித்து வெளியாகியுள்ள படம் ‘பொன்னியின் செல்வன்’.கல்கி எழுதிய வரலாற்று புதினமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை தழுவி இரண்டு பாகமாக உருவாக்கப்பட்ட இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி, ரூ 500 கோடி வசூலித்தது.
 
இப்படம்  தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல்லாக இருக்கும் நிலையில், பொன்னியின் செல்வன் 2 படம்  ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது. இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்த சூழலில் பல பகுதிகளில் ஹவுஸ் புல் காட்சிகளுடன் ஓடியது. ஆனால் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதால் வசூலில் பின்தங்கிவிட்டது. இப்படத்தில் குந்தவையாக திரிஷாவும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடித்திருந்தனர். இவர்களது ரொமான்ஸ் மற்றும் கெமிஸ்ட்ரி வேற லெவலில் இருந்தது. 
 
இதனால் கார்த்திக்கும் அவரது மனைவிக்கும் இடையில் தினமும் சண்டை வருகிறதாம். படத்தில் நல்ல கெமிஸ்ட்ரி இருக்கவேண்டும் என்பதற்காக கட்டி பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும்,  படுக்கையறை காட்சியில் உருண்டு பெறலனும். இயக்குனர்களின் வற்புறுத்தலின் பெயரில், லிப் கிஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும் இதற்கெல்லாம் அக்ரீமெண்ட் போட்டு தான் நடிகர்களை பெண்கள் திருமணம் செய்துக்கொள்ளவேண்டும். இது கார்த்தி மனைவிக்கு பிடிக்கலையாம்.  உங்க அண்ணன் சூர்யா ரொமான்ஸ் இல்லாத படங்களில் கூட நடிக்கிறாரே, நீங்களும் அப்படி நடிக்க கூடாதா என்றும், இல்லை நடிகைகளை பார்த்தால் தான் ரொமான்ஸ் அதிகமாக வருகிறதா? என கேள்வி மேல் கேள்வி கேட்டு நச்சரிக்கிறாராம்.