1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (22:45 IST)

பிக்பாஸ் சீசன் 3ல் கவின் ஹீரோவா? வில்லனா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ஒரு மறக்க முடியாத நபர் இருப்பார்கள். முதல் சீசனில் ஓவியாவும் இரண்டாவது சீசனில் ரித்விகாவும் இருந்த நிலையில் தற்போது மூன்றாவது சீஸனில் அனைவரது மனதிலும் கவின் இருப்பார் என்பதில் சந்தேகம் இருக்காது
 
 
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் அதிகபட்ச புரோமோ வீடியோக்களில் வந்தவர் கவின் தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது காதல் லீலைகள் ஆகட்டும், நட்பு கொடுக்கும் முக்கியத்துவம் ஆகட்டும், லாஸ்லியா உடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு ஆகட்டும், சாண்டியுடன் அடித்த ஜாலி ஆகட்டும், 5 பேர் கொண்ட ஒரு குழுவை ஆரம்பித்தது ஆகட்டும், வனிதாவுடன் மற்றும் சாக்சியிடம் மோதியதுஆகட்டும் அனைத்திலும் கவின் பெயர்தான் அடிக்கடி சமூக வலைதளங்களில் எழுந்து கொண்டிருந்தது
 
 
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் 11 முறை நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் அனைத்து முறையும் காப்பாற்றப்பட்டு இருக்கிறார் என்பது மட்டுமன்றி அனைத்து முறையும் அதிகபட்ச ஓட்டுகளை வாங்கி முதலிடத்தை பிடித்திருக்கிறார். 
 
 
மேலும் இந்த சீசனில் 90 நாட்களுக்கு மேல் இருந்தும் கேப்டனாக இல்லாத ஒரே போட்டியாளர் கவின் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமூக வலைதளங்களில் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் சம அளவில் கவினுக்கு இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
முதல் சீசனில் ஓவியாவுக்கு இணையாக கவின் இருப்பாரா என்றால் அது சந்தேகமே, இருப்பினும் இந்த சீசனின் ஹீரோவாக பெரும்பாலோர்களாலும் வில்லனாக ஒருசிலராலும் பார்க்கப்படுபவர்தான் கவின்