அந்தாதூன் பட ரீமேக் இன்று பூஜையுடன் தொடக்கம் !
அந்தாதூன் படத்தின் பூஜையுடன் இன்று தொடங்கியது. இதனால் பிரித்விராஜ்-ன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அந்தாதூன் என்ற திரைப் படத்தின் தமிழ் ரீமேக் படத்தில் பிரசாந்த் நடிக்க உள்ளார் . அந்தகன் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரிக்கும் இந்த படத்தை முதலில் மோகன் ராஜா இயக்க இருந்தார். ஆனால் லூசிபர் படத்தின் ரீமேக் வாய்ப்பு வந்ததால் அதில் இருந்து விலகினார்.
இதையடுத்து பொன்மகள் வந்தாள் புகழ் ஜே ஜே பிரட்ரிக் இயக்க உள்ளார். இந்த படத்தில் பிரசாந்தோடு கார்த்திக் மற்றும் தபு கதாப்பாத்திரத்தில் சிம்ரன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தின் ப்ரோமோவை கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிட்டு படக்குழு ஆச்சர்யப்படுத்தியது. அதில் பிரசாந்த் பிரசாந்த் பியனோ வாசிப்பது போல் காட்சிகள் இருந்தது.
இந்நிலையில் இப்படம் மலையாளத்திலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஆயுஷ்மான் கதாப்பாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்கவுள்ளார். ஹிந்தியில் ராதிகா ஆப்தே நடித்திருந்த கதாப்பாத்திரத்தில் ராஷி கண்ணா நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ரவி.கே சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் இன்று பூஜையுடன் தொடங்கப்பட்டது.
பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் அந்தாதூண் திரைப்படம் அனைத்து மொழிகளும் தேசிய விருது பெறப்படும் எனக் கூறப்படுகிறது.