வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (12:10 IST)

குக் வித் கோமாளி சீசன் 5 ல் நான் இல்லை… பிரபலம் பகிர்ந்த தகவல்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் 'குக் வித் கோமாளி நிகழ்ச்சி குக் வித் கோமாளி, புகழ், அருண்விஜய், cooku with comali, arun vijay, pughazஅனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்த புகழ் சினிமாவில் கதாநாயகனாகும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை நான்கு சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்க உள்ளது. அதில் போட்டியாளர்களாக யார் யார் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து நடுவராக பங்கேற்று வந்த வெங்கடேஷ் பட் ஐந்தாவது சீசனில் தான் பங்கேற்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக “நான் உட்பட பல லட்சம் பேரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக இருந்த குக் வித் கோமாளியில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்கிறேன்.  24 ஆண்டுகளுக்கு மேலாக் நான் அங்கம் வகிக்கும் சேனலுக்கும் இந்த நிகழ்ச்சியின் இயக்குனர்களுக்கும் நன்றி. இந்த முடிவு கடினமானதாக இருந்தாலும், இதில் நான் உறுதியாக இருக்கிறேன். விரைவில் ஒரு வித்தியாசமான நிகழ்ச்சியில் உங்களை சந்திக்க இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.