ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஜூலை 2022 (09:14 IST)

”விமர்சனம் செய்ய 3 லட்ச ரூபாய் கேட்கிறார் மாறன்…” நடிகர் பார்த்திபனின் குற்றச்சாட்டு

பார்த்திபன் சமீபத்தில் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

பார்த்திபன் நடித்து இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்று அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் ’இரவின் நிழல் படத்திற்கு முன்பே சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் வெளியாகி விட்டது என புளூசட்டை மாறன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகிய ஈரானிய திரைப்படமான ‘Fish and Cat' என்ற திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான்லீனியர் திரைப்படம் என்றும் இதை உலக சினிமா பத்திரிகைகள் ஏற்றுக் கொண்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே பார்த்திபன் விளம்பரம் செய்வதுபோல் உலகின் முதல் நான்லீனியர் திரைப்படம் இரவில் நிழல் அல்ல என்றும் அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான ஆதாரங்களையும் அவர் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ப்ளுசட்ட மாறனின் இந்த விமர்சனங்கள் சம்மந்தமாக சமூகவலைதளங்களில் கடுமையான எதிர் விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் இப்போது சிலர் ப்ளுசட்ட மாறனின் உருவ பொம்மையை செருப்பால் அடித்து எரித்து சில ரசிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளன.

இந்நிலையில் இந்த பிரச்சனையின் அடுத்த கட்டமாக தற்போது நடிகர் & இயக்குனர் பார்த்திபன் வெளியிட்டுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது. அந்த ஆடியோவில் பார்த்திபன் தன தரப்பு விளக்கங்களை அளித்துள்ளார். அதில் முக்கியமாக “ஒரு தயாரிப்பாளர் தன் படத்தை பாஸிட்டிவ்வாக விமர்சனம் செய்ய ப்ளு சட்ட மாறன் 3 லட்சம் ரூபாய் கேட்டதாக என்னிடம் கூறினார்” என்று கூறியுள்ளார்.