ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 12 ஜூலை 2022 (15:33 IST)

இந்த வாரம் 5 படங்கள் ரிலீஸ்: சினிமா ரசிகர்கள் ஜாலி!

theater
இந்த வாரம் 5 திரைப்படங்கள் வெளியாக இருப்பது அடுத்து சினிமா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் 
 
பார்த்திபன் இயக்கிய ’இரவின் நிழல்’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட நான்லீனியர் திரைப்படம் என்பதால் இந்த திரைப் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது
 
மேலும் லிங்குசாமி இயக்கத்தில் உருவான ’தி வாரியர்’ என்ற திரைப்படம் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இது ஒரு கமர்சியல் படம் என்பதால் நிச்சயம் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
சாய் பல்லவி நடித்த ’கார்கி’ திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாகும் திரைப்படங்களின் ஒன்று. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
 
அதேபோல் பிரபுதேவா நடித்த ‘மை டியர் பூதம்’ என்ற திரைப்படமும் ஜூலை 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. குழந்தைகளுக்கு பிடித்தமான படமாக இந்த படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனை மிதாலிராஜ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக சபாஷ் மித்து’ என்ற திரைப்படம் ஜூலை 15ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் மிதாலிராஜ் கேரக்டரில் டாப்சி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது