திங்கள், 30 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 18 ஜூலை 2022 (10:19 IST)

சர்ச்சையில் சிக்கிய இரவின் நிழல் நடிகை… மன்னிப்பு கேட்ட பார்த்திபன்!

இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள பிரிகிடா சஹா தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

வித்யாசமான கதைக் களன்களோடு திரைப்படம் எடுப்பதில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் அவர் உருவாக்கிய ஒத்த செருப்பு ஒரே ஒரு நடிகரை வைத்து மட்டுமே எடுக்கப்பட்ட வித்தியாசமான முயற்சியாக அமைந்தது.

இதையடுத்து அவர் இரவின் நிழல் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். இந்த படம் மொத்தமும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ள உலகின் முதல் நான் லீனியர் திரைப்படம் என்றும் விளம்பரப்படுத்தப் பட்டு வருகிறது. இந்த படத்துக்கு இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த வாரம் வெள்யாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஆனால் படத்தில் கெட்டவார்த்தைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. இது சம்மந்தமாக படத்தில் நடித்த நடிகை பிரிகிடாவின் கேட்கப்பட்ட போது “சேரி சம்மந்தமாக ஒரு நிகழ்வுகளைப் படமாக்கும் போது அதில் கெட்டவார்த்தைகள் இடம்பெறதான் செய்யும். நம் சேரிகளில் சென்று பார்த்தால் அங்கிருக்கும் மக்கள் அப்படிதான் பேசுவார்கள்” என்று பதிலளித்தார். அவரின் இந்த பதில் சர்ச்சைகளையும் அவர் விமர்சனங்களையும் உருவாக்கியது.

அதையடுத்து தனது பேச்சுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் பிரிகிடா சம்மந்தமாக இயக்குனர் பார்த்திபனும் மன்னிப்பு கேட்டுள்ளார்.