ரஹ்மான் இசையில் ஃபஹத் பாசில் நடிப்பில் மிரட்டலான மலையன்குஞ்சு டிரைலர்!
மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
மலையாள நடிகர் பஹத் பாசில் தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு மலையாளம் தாண்டியும் ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் அவர் நடித்த புஷ்பா மற்றும் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடின. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகியுள்ள மலையன் குஞ்சு திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகிறது.
இதையடுத்து தற்போது மலையன் குஞ்சு திரைப்படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மகேஷ் கதை எழுதியுள்ள இந்த திரைப்படத்துக்கு கதை எழுத, சஜிமோன் இயக்கியுள்ளார்.