வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 26 மார்ச் 2024 (12:32 IST)

நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரில்லர் படம் "இரவின் கண்கள்"

செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் மனிதனுக்கும்  இருக்கும் தொடர்பை சொல்லும் " இரவின் கண்கள் " 
 
M. K. என்டர்டெயின்மெண்ட் என்ற பட நிறுவனம் சார்பில் பிரதாப் தயாரித்துள்ள படத்திற்கு "இரவின் கண்கள்" என்று தலைப்பிட்டுள்ளனர்.
 
பாப் சுரேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார்.டாலி ஐஸ்வர்யா கதாநாயகியாக நடித்துள்ளார். 
 
மற்றும் கிரி துவாரகேஷ், செல்வா, அழகுராஜா, தண்டபாணி, குமரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
கதை, திரைக்கதை : பாலசுப்ரமணியம் K. G 
திரைக் கதையமைத்து,இயக்கி நாயகனாக நடித்துள்ளார் - பாப் சுரேஷ்.
 
படம் பற்றி இயக்குனர் பாப் சுரேஷ் பேசியதாவது...
 
இந்த கதை IT ல் பணிபுரியும் விக்டர் என்பவனுக்கும், அவன் வைத்திருக்கும் IRIS ( Amazon Alexa போன்று) எனும் செயற்கை நுண்ணறிவு கொண்ட கருவிக்கும் உள்ள நட்பை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
 
விக்டர் கல்யாணம் ஆனவன். பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கிறான். அவன் வைத்திருக்கும் IRIS எனும் கருவி ஒரு விபத்திற்கு பின் வித்தியாசமாக நடந்து கொள்கிறது. அது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தாலும் அதை அவன் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. 
 
ஆனால் விக்டர் எதிர்பாராத விதமாக ஒரு சண்டையில் கொலைக் குற்றவாளியாகிறான்
 
அந்த கொலை குற்றத்தில் இருந்து எப்படி மீண்டு வருவது என்று தெரியாமல் முழிக்கும் விக்டருக்கு அவனது நண்பன் (IRIS) , அந்தக் கொலையை மறைக்க வழிகாட்டுகிறது என்பதை விறு விறுப்பான திரைக்கதையில் சொல்லிருருக்கிறோம்.
 
ஆனால் விக்டர் தொடர்ந்து மேலும் பல சிக்கல்களில் மாட்டிக் கொள்கிறான்.
 
IRIS அவனை  காப்பாற்றியதா, இல்லையா என்பதே மீதிக்கதை.
 
ரசிகர்களுக்கு ஒவ்வொரு காட்சிகளும் புதுவிதமாகவும் வித்தியாசமாகவும் இருக்கும் என்றார் இயக்குனர் பாப் சுரேஷ்.
 
இந்த படத்தை உத்ரா புரொடக்ஷன்ஸ் வரும் ஏப்ரல் 5 ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறது .