வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. விமர்சனம்
Written By J.Durai
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (13:53 IST)

"அமிகோ கேரேஜ்" திரைவிமர்சனம்

இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் எழுதி, இயக்கி இருக்கும் படம் "அமிகோ கேரேஜ்" 
 
இத் திரைப்படத்தில் மாஸ்டர் மகேந்திரன், அதிரா ராஜ்,தீபா பாலு,ஜி.எம்.சுந்தர், தாசரதி நரசிம்மன், மதன கோபால் உட்பட மற்றும் பலர்  நடித்துள்ளனர்.
 
ஏரியாவில் அமிகோ கேரேஜ் என்ற கார் செட் இருக்கிறது. அந்த  கார் செட்டில்  இவருக்கு நபர்களுடன் கதாநாயகன் மகேந்திரன் சிறுவயதில் இருந்தே   பழக வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
 
இப்படி இருக்கும் நிலையில் எதிர்பாராத விதமாக அந்த கார் செட்டுக்குள் செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. 
 
பின்னர் அந்த அமிகோ கேரேஜ் செட் ஓனரான ஜி எம் சுந்தரத்துக்கும் மகேந்திரனுக்கும் நல்ல உறவு ஏற்படுகிறது.
 
பள்ளிக்கூடத்தில் இருந்து கல்லூரி முடியும் வரை தினமும் அந்த கார் செட்டுக்கு சென்று வருவதை வழக்கமாக  வைத்திருக்கிறார் நாய்கன் மகேந்திரன்.
 
இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் மகேந்திரனுக்கும் அந்த பகுதியில் இருக்கும் ரவுடிக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. 
 
இந்த பிரச்சனையால் மகேந்திரனுடைய வாழ்க்கையே திசை மாறுகிறது.
 
அதன் பின்னர் நாயகன் மகேந்திரன் என்ன என்ன பிரச்சினைகளை சந்தித்தார்.
என்பதே படத்தின் மீதி கதை.
 
கல்லூரி மாணவனான மகேந்திரன் சாதாரண  நடுத்தர குடும்பத்து  பையனாக சிறப்பாக நடித்திருக்கிறார்.
 
படத்தின் கதாநாயகி அதிரா ராஜ் தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்.
 
ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் இருந்து கேங்ஸ்டராக  எப்படி மாறுகிறார் என்று  கதையை கொஞ்சம் வித்தியாசமாக  கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் நாகராஜன்.
 
பாலமுரளி பாலு இசை கேட்கும்படி  உள்ளது.
 
படத்தின் பெரும்பாலும் காட்டப்படும் இரவு காட்சிகளை அழகாக படம் பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் விஜயகுமார் சோலைமுத்து.
 
 மொத்தத்தில் "அமிகோ கேரேஜ்"பள்ளி மாணவர்களுக்கு நல்ல ஒரு மெசேஜ்