1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 1 அக்டோபர் 2020 (19:35 IST)

’இருட்டு அறையின் முரட்டு குத்து’ இரண்டாம் பாக டைட்டில் இதுதான்!

நடிகர் கௌதம் கார்த்திக் நடித்த அடல்ட் காமெடி திரைப்படங்களான ’ஹர ஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ஆகிய திரைப்படங்களை இயக்கிய சந்தோஷ் குமார் ’இருட்டு அறையின் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே
 
இந்த படத்தில் கௌதம் கார்த்திக் நடிக்க மறுத்ததை அடுத்து இயக்குனர் சந்தோஷ் ஜெயக்குமாரே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லூக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. இந்த டைட்டிலை நடிகர் கௌதம் கார்த்திக் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் 
 
‘இரண்டாம் குத்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த டைட்டிலும் முதல் இரண்டு படங்களைப் போலவே இரட்டை அர்த்தம் உள்ளதாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்