செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 24 டிசம்பர் 2024 (12:27 IST)

முதல்முறையாக இதிகாச படம் எடுக்க போகும் கிறிஸ்டோபர் நோலன்! படத்தலைப்பை கேட்டு ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

Christopher Nolan

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் அடுத்து இயக்கப் போகும் பிரம்மாண்ட படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

 

 

பல நுட்பமான திரைக்கதை அம்சங்களை கைக்கொண்டு, வித்தியாசமான கதைக்களங்களை படமாக்குபவர் ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன். இவரது Inception, Interstellar, Tenet போன்ற குழப்பமான திரைக்கதை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அதேசமயம், நேர்கதையாக செல்லும் இவரது Prestige, Dunkirk, Oppenheimer உள்ளிட்ட படங்கள் க்ளாசிக் படங்களாகவும் கருதப்படுகின்றன.

 

இரண்டாம் உலகப்போர் காலக்கட்டம் வரை சென்று படமெடுத்து வந்த கிறிஸ்டோபர் நோலன், தற்போது முதல்முறையாக இதிகாச கதை ஒன்றை படமாக்குகிறார். கிரேக்க இதிகாச கதையான ஹோமர் எழுதிய ‘தி ஒடிசி’யைதான் படமாக எடுக்கப்போகிறாராம் நோலன்.
 

 

இந்த படத்தில் ஸ்பைடர்மேனில் நடித்த ஸெண்டாயா, டாம் ஹாலண்ட் ஆகியோரும், பேட்மேனில் நடித்த ராபர்ட் பேட்டின்சன், மார்ஷியன் பட புகழ் மேட் டேமன் என பெரிய நடிகர் பட்டாளமே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு விட்டனர். தற்போது இந்த படத்திற்கு அதிகாரப்பூர்வமாக The Odyssey என பெயரிடப்பட்டுள்ளது.

 

நோலன் இயக்கத்தில் வெளியான பேட்மேன் படங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது போல, இந்த ஒடிசியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு இதிகாசக் கதை நோலனின் இயக்கத்தில் எப்படி இருக்கப் போகிறது என்று ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது.

 

Edit by Prasanth.K