இப்படி செய்வதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம்: நடிகர் மன்சூர் அலிகான் ஆவேச பேச்சு!

Sasikala| Last Modified புதன், 5 ஜூலை 2017 (13:06 IST)
நடிகர் மன்சூர் அலிகான் மனதில் பட்டதை அப்படியே சொல்லிவிடுவார். இவர் தற்போது நடிகர் கமல் நடத்தும் பிக் பாஸ்  நிகழ்ச்சி குறித்து அதிரடியாய் தனது கருத்தை கூறினார். சமீபத்தில் இவர் கலந்துக்கொண்ட இசை வெளியீட்டு விழாவில் ஒரு  சென்ஸாரில் நடக்கும் அசிங்கத்தை பற்றி பேசியுள்ளார்.

 
சினிமா திரையுலகில் ஒரு படம் வெளிவர என்னவெல்லாம் செய்ய வேண்டி உள்ளது. சென்ஸாரில் ஒரு படத்தின் யு  சான்றிதழுக்காக பலரும் பல லட்சம் வரை பணத்தை செலவு செய்கின்றார்கள். இதை அவர்கள் விரும்பி தருவதில்லை, ஒரு  சிலர் பதவியை தவறாக பயன்படுத்தி கொள்ளையடிக்கவும் செய்கின்றனர். சமீபத்தில் வெளியான தமிழ் படமான அதாகப்பட்டது  மகாஜனங்களே படத்திற்கு ரூ. 4 லட்சம், வனமகன் படத்திற்கு ரூ. 15 லட்சம், காற்று வெளியிடை படத்திற்கு ரூ. 1 கோடிக்கு  பேசிப்பட்டு இறுதியாக ரூ. 60 லட்சம் வாங்கினார்கள்.
 
இவ்வாறு பணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் தருவதற்கு பிச்சை எடுக்கலாம் என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசத்துடன்  கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :