1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (14:00 IST)

பாக்யராஜ் விமர்சனத்திற்கு நொண்டி சாக்கு சொன்ன இனியா

சமீபத்தில் நடைப்பெற்ற திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட பாக்யராஜ், நடிகை இனியா நிகழ்ச்சிக்கு வாராதது குறித்து பேசியதற்கு தற்போது இனியா பதிலளித்துள்ளார்.


 

 
இனியா நாயகியாக நடித்துள்ள சதுர அடி 3500 என்ற திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீடு விழா சென்னையில் நடந்தது. நிகழ்ச்சியில் நடிகை இனியா கலந்துக்கொள்ளவில்லை. விழாவில் கலந்துக்கொண்ட பேசிய பாக்யராஜ் இனியா நிகழ்ச்சிக்கு வராதது குறித்து அவரை விமர்சித்து இருந்தார்.
 
இதற்கு தற்போது நடிகை இனியா பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
சில நாட்களுக்கு முன்பு கணுக்காலில் சுளுக்கு ஏற்பட்டு நடக்க முடியவில்லை. மருத்துவர் 10 நாட்களுக்கு ஓய்வு எடுக்கும்படி அறிவுரை வழங்கினார். இதனால் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள முடியவில்லை. இதை பட குழுவினருக்கு தெரிவித்தேன்.
 
பாக்யராஜ் படக்குழு சொன்ன தகவலை வைத்து மேடையில் பேசியுள்ளார். அதில் எனக்கு வருத்தம் இல்லை. இசை வெளியீடு விழாவிற்கு எனக்கு வாட்ஸ்அப் மூலம் மட்டுமே செய்தி வந்தது. அழைப்பிதழ் வரவில்லை என்றார்.