திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வியாழன், 22 அக்டோபர் 2020 (20:11 IST)

பா ரஞ்சித்-ன் குதிரைவால் பட டீசர் வெளியீடு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி மற்றும் காலா உள்பட ஒருசில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பா ரஞ்சித், தற்போது ஆர்யா நடித்து வரும் ’சால்பேட்டா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது தெரிந்ததே
 

இந்த நிலையில் அவர் தனது நீலம் புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் மூலம் ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்றும் அவற்றில் ஒன்று ‘குதிரைவால்’ என்ற திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வெளியீடு இன்று வெளியாகியுள்ளது.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் இதை வெளியிட்டுள்ளார்.

குதிரைவால் என்ற இப்படத்தில் கலையரசன் மற்றும் அஞ்சலி பட்டேல் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும், இப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.