1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 27 மே 2024 (07:36 IST)

இந்தியன் படத்தின் ரி ரிலீஸ் தேதியை அறிவித்த தயாரிப்பாளர்!

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2 , இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூலை 12 ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகவுள்ளது.

இதற்கிடையில் இந்தியன் 2 படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தியன் முதல் பாகத்தை மே 30 ஆம் தேதி ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இதுவரை தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் ஜூன் 7 ஆம் தேதி இந்தியன் திரைப்படம் பிரம்மாண்டமாக அதிக திரைகளில் ரி ரிலீஸ் ஆகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.