1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : புதன், 22 மே 2024 (17:51 IST)

கமல்ஹாசன் - ஷங்கரின் ‘இந்தியன் 2’ பாரா சிங்கிள் பாடல் ரிலீஸ்..!

கமலஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூலை 12ஆம் தேதி வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பதை பார்த்தோம். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் இந்த படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
அனிருத் காம்போஸ் செய்த இந்த பாடலை அனிருத் மற்றும் சுருதிகா பாடி இருக்க பா விஜய் எழுதியுள்ளார் என்பதும் இந்திய சுதந்திர போராட்டத்தின் போது நடந்த நிகழ்வை கண்முன் கொண்டுவரும் அளவுக்கு இந்த படத்தின் பாடல் வரிகளும் காட்சிகளும் உள்ளன என்பது இந்த பாடலை பார்க்கும்போது தெரிய வருகிறது. 
 
இந்த பாடல் வெளியானவுடன் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது என்றும் இந்த படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், குரு சோமசுந்தரம், வெண்ணிலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  
 
Edited by Siva