நான் கேப்டன் மார்வெலாக நடித்திருந்தால்… – மனம் திறந்த டாப்ஸி

tapsee
Last Modified திங்கள், 22 ஜூலை 2019 (16:18 IST)
”எனக்கு அவெஞ்சர்ஸ் படம் ரொம்ப பிடிக்கும். எதிர்காலத்தில் மார்வெல் திரைப்படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது” என நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.

இந்திய சினிமாவில் பிரபலமான நடிகை டாப்ஸி. தமிழில் “ஆடுகளம்” மூலம் அறிமுகம் ஆனவர். தமிழில் அதிகம் வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். பிறகு இந்தி சினிமா பக்கம் கவனம் செலுத்தியவர் க்ளாமர் கதைகளை விடுத்து பெண்களை மையப்படுத்திய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இவர் நடித்து வெளியான “பிங்க்” இந்தியில் இவருக்கு பரவலான பாராட்டை பெற்று தந்தது. சமீபத்தில் “மாயா” இயக்குனர் அஸ்வின் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான “கேம் ஓவர்” அனைவராலும் கொண்டாடப்பட்டது.

பிங்க் பட இயக்குனர் அனுபவ் சின்ஹாவின் தலைப்பிடப்படாத அடுத்த படத்தில் நடிக்க இருக்கும் டாப்ஸி செய்தியாளர்கள் சந்திப்பில் “பிங்க் எனக்கு சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திய படம். ஆர்ட்டிக்கிள் 15ல் ஆயுஷ்மான் குரானாவின் கதாப்பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

எனக்கு அவெஞ்சர்ஸ் திரைப்படம் மிகவும் பிடிக்கும். முக்கியமாக அயர்ன் மேனாக நடித்த ராபர்ட் டோனிக்கு நான் மிகப்பெரிய ரசிகை. மார்வெல் சூப்பர்ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று எனக்கு மிகுந்த ஆசை. கேப்டன் மார்வெல் படம் பார்த்தபோது என்னால் அந்த கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்ய முடியும் என்று தோன்றியது. மார்வெல் கதாப்பாத்திரங்களில் இந்திய சூப்பர் ஹீரோ கதாப்பாத்திரம் ஏதாவது இருந்து அதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

அவெஞ்சர்ஸ் இறுதிக்காட்சியில் டோனி ஸ்டார்க் இறக்கும் காட்சியை பார்த்து தேம்பி தேம்பி அழுதேன். அதை ஒரு படம் என்று என்னால் விலகி போக முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.இதில் மேலும் படிக்கவும் :