1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Indian 2 shooting plan latest update

இந்தியன் 2 ஷூட்டிங் இன்னும் இத்தனை நாட்கள் உள்ளதா? இயக்குனர் ஷங்கரின் ப்ளான்!

இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

இந்நிலையில் இந்தியன் 2 ஷூட்டிங்கை மேலும் 60 நாட்கள் நடத்த வேண்டும் என இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகவும், அதில் கமல்ஹாசன் 20 நாட்கள் நடிக்க வேண்டி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
வெளிநாடுகளில் சென்சார் செய்யப்பட்ட விஜய்யின் லியோ!