1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
  4. Indian 2 will have Ramcharan as cameo

இந்தியன் 2-வில் ராம்சரண் தேஜா… இயக்குனர் ஷங்கரின் திட்டம்!

இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது மீண்டும் தொடங்கி ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளை வைத்து பார்த்ததில் படத்தை இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யலாம் என்ற முடிவை படக்குழுவினர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் மேலும் சில காட்சிகளை படமாக்க வேண்டியுள்ளதாம். அந்த ஷூட்டிங் முடிந்தபின்னர்தான் ரிலீஸ் வேலைகள் தொடங்கும் என தெரிகிறது.

விரைவில் மீண்டும் இந்தியன் 2 ஷூட்டிங் தொடங்கப்பட உள்ள நிலையில் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜாவை சிறப்பு வேடத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது. ஷங்கர் இயக்கும் கேம்சேஞ்சர் படத்தில் ராம்சரண் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
அடுத்த கட்டுரையில்
சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை வெளியில் சொல்ல முடியாது… இசையமைப்பாளர் டி இமான்!