1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: புதன், 19 ஏப்ரல் 2023 (13:42 IST)

’புஷ்பா’ தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரி சோதனை: தெலுங்கு திரையுலகில் பரபரப்பு..!

நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது 
 
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகங்களில் மற்றும் தயாரிப்பாளர் வீடுகளில் வருமானவரித்துறை அலுவலர்கள் சோதனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
புஷ்பா திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர் நிறுவனத்தின் அலுவலகம் ஹைதராபாத்தில் உள்ளது. இந்த அலுவலகம் மற்றும் இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களின் வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் அமலாகத்துறை அதிகாரிகளும் சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
புஷ்பா திரைப்படம் 170 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 350 கோடிகள் வசூல் செய்த நிலையில் இந்த படத்தின் குழுவினர் ஒழுங்காக வரி கட்டினார்களா? என்பது குறித்த விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva