விஜய் பட தயாரிப்பாளர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு.. திரையுலகில் பரபரப்பு..!
விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்த 'வாரிசு' திரைப்படத்தை தயாரித்தவர் தில் ராஜு. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'கேம் சென்டர்' திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றதாக கூறப்பட்டது. மேலும், இவர் சில பெரிய பட்ஜெட் படங்களையும் தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தில் ராஜு வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ராஜுவுக்குச் சொந்தமான அலுவலகம், வீடுகள் மற்றும் சில இடங்களிலும் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தில் ராஜு வீடு மட்டுமின்றி 'புஷ்பா' திரைப்படத்தின் தயாரிப்பாளர் வீட்டிலும் சோதனை நடந்து வருவதாகவும், இதனால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோதனைக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Edited by Mahendran