1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 7 ஜூன் 2018 (17:00 IST)

விராட் கோலிக்கு மெழுகு சிலை- ரசிகர்கள் பெருமிதம்

இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் நேற்று மெழுகு சிலை வைக்கப்பட்டுவுள்ளது.
 
உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகம் மேடம் துஸாட்ஸ், சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. 
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை நேற்று மேடம் துஸாட்ஸ். அருங்காட்சியத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை கண்ட ரசிகர்கள் மிகவும் பெருமிதம் அடைந்துள்ளனர்.