செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சனியனே என்று திட்டக் கூடாது என கூற காரணம் என்ன?

சனீஸ்வரர் பாரபட்சம் பார்க்காதவர். நாம் செய்யும் நல்லது, கெட்டதுக்கு தகுந்தாற்படி பலன் கொடுப்பார். ஆனால் அவரால் கிடைக்கும் நன்மையால் மகிழாமல், தீமையை மட்டுமே எண்ணி மக்கள் பயந்தனர். இதனால் அவருக்கு கெட்ட பெயரே  மிஞ்சியது.
மனம் வருந்திய சனி, அக்னி வனம் எனப்படும் திருக்கொள்ளிக்காடு வந்து, சிவனை நினைத்து தவமிருந்தார். சிவன் தரிசனம்  தந்து, சனீஸ்வரரை பொங்கு சனியாக மாற்றினார். இவர் அக்னீஸ்வரர் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
 
சனீஸ்வரன் மந்த கதியுள்ளவர் என்பது இயற்கையான விதி. இந்தக் கிரகம் மற்ற கிரகங்களை விட சூரியனை மெதுவாகவே சுற்றும் என்பதால், அறிவியல் ரீதியாக இவ்வாறு சொல்வதுண்டு. வீட்டில் கூட குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்றால்,  ஏன் மந்தமாக இருக்கிறாய்? என கேட்பதுண்டு. மந்த கதி உள்ளவர்களுக்காக சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனியனே என திட்டக்கூடாது. இவ்வாறு திட்டினால், யார் திட்டுகிறாரோ, அவர் தன்னைக் கேலி செய்ததாகக் கருதி, சனீஸ்வரன்  அவர் மீதும் தன் பார்வையை செலுத்தி விடுவார் எனபது ஐதீகம். மந்த கதி உடையவர்களிடம் பக்குவமாக பேசி  திருத்துபவர்களுக்கு சினீஸ்வரனின் அருள் கிடைக்கும்.