1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (12:24 IST)

காஷ்மோராவில் கார்த்தியின் வித்தியாச கெட்டப்

காஷ்மோராவில் கார்த்தியின் வித்தியாச கெட்டப்

கோகுல் இயக்கத்தில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள காஷ்மோரா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர்.

 

 
 
இந்தப் படத்தில் கார்த்தி 3 வித்தியாசமான வேடங்களில் நடிப்பதாக கூறப்பட்டது. அவரது கெட்டப்பை அறிய ரசிகர்கள் ஆவலுடன் இருந்தனர். பாகுபலியில் மொட்டைத் தலையும், அடர்த்தியான தாடியுமாக சத்யராஜ் நடித்த கட்டப்பா கெட்டப்பில் கார்த்தியின் படத்தை வெளியிட்டுள்ளனர். பாகுபலி போலவே இதுவும் சரித்திரப் படம் என்பதை பர்ஸ்ட் லுக் தெளிவுப்படுத்துகிறது.


 
 
காஷ்மோராவில் காஷ்மோரா, ராஜ்நாயக் என இரு வேடங்களில் கார்த்தி நடித்துள்ளார். மூன்றாவது வேடத்தை ரகசியமாக வைத்துள்ளனர். தீபாவளிக்கு படத்தை வெளியிடுகின்றனர்.