செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 8 செப்டம்பர் 2017 (11:40 IST)

இதுவே போதும் நான் வெற்றி பெறும் ஆசை இல்லை; பாசத்தில் கதறிய சிநேகன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவிஞர் சிநேகனின் தந்தையை பிக்பாஸ் வீட்டிற்கு வரவைத்தார். இது தொடர்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ள பிரமோ வீடியோவில் சிநேகனுடன் மற்ற போட்டியாளர்களும் அழுவது போல் காட்டப்பட்டுள்ளது. இதனால்  சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.


 
 
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் சிநேகனின் தந்தையை அனுப்பி வைத்தார். பல வருடங்களுக்கு பிறகு தனது தந்தையை  பார்த்து சிநேகன் உடைந்து கதறி அழுததை பார்த்து பார்த்த மற்ற போட்டியாளர்களும் கதறி அழுதனர். இதனால் பிக்பாஸ் வீடு ஒரே பாச மழையில் நனைந்தது.
 
எப்படி கம்பீரமாக இருந்த மனிதன் இப்படி குழந்தை மாதிரி ஆகிவிட்டாரே? எத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் பார்க்கிறேன். தன்னை எப்படி வளர்த்தார் என நீண்ட நேரம் எமோஷனலாக பேசினார் சிநேகன். 'கல்யாணம் செய்துகொள்' என சினேகனின்  தந்தை தொடர்ந்து கூற, வீட்டில் இருந்த மற்றவர்கள் 'நாங்க இருக்கோம்' கண்டிப்பா இந்த வருஷம் கல்யாணம் நடத்துவோம்  என கூறினர்.
 
சக்தி பேசும்போது சிநேகன் என் சகோதரர் மாதிரி, 'ஆல்ரெடி பொண்ணு ரெடி..பேசியாச்சு' என கூறினார். அது யார் என்பது தான் தற்போது அனைவரது மனதிலும் உள்ள கேள்வியாக உள்ளது. மேலும் சிநேகனின் தந்தைக்கு 94வயது என்று சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.