2.0 படத்தின் டீசர் இப்படியா வரப்போகுது! சுவாரஸ்ய தகவல்

teaser
VM| Last Modified திங்கள், 10 செப்டம்பர் 2018 (13:09 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் எந்திரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டுள்ளது.

லைகா நிறுவனம் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்  ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த படத்துக்கு  2.0 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் எமி ஜாக்சன் கதாநாயகியாகவும், அக்ஷயகுமார் வில்லனாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் நேரடியாக வெளியாக உள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில், கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருகிறது. நவம்பர் இறுதியில் படத்தை வெளியிட லைகா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த  2.0 படத்தின் டீசர் 3-டி தொழில்நுட்பத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :