செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (22:34 IST)

தமிழில் சன்னிலியோன் ஹீரோயினியாக நடிக்கும் முதல் படம்

பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் பாலிவுட் திரையுலகில் தனது கவர்ச்சியால் கலக்கி வரும் நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் 'வடகறி' என்ற தமிழ் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார். இந்த நிலையில் தமிழில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்

தமிழில் முதல்முதலாக ஹீரோயினியாக சன்னிலியோன் நடிக்கும் படம் வரலாற்று கதையம்சம் கொண்ட படம் என்றும் இந்த படத்தை வடிவுடையான் என்ற இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்திற்காக சன்னிலியோன் குதிரையேற்றம், வாள்பயிற்சி ஆகியவைகளை பயிற்சி எடுக்கவுள்ளாராம். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கவுள்ளது.