திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 11 மார்ச் 2018 (17:27 IST)

விஷால் அதிரடி முடிவால் அஜித்துக்கு ஏற்பட்ட பாதிப்பு

தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் நேற்று அதிரடியாக படப்பிடிப்பு, போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் உள்பட  சினிமா சம்பந்தப்பட்ட எந்த பணியும் நடக்காது என்று அறிவித்தார். இதனால் வரும் 23ஆம் தேதி தொடங்குவதாக இருந்த அஜித்தின் 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித், நயன்தாரா நடிப்பில் சிவா இயக்கவுள்ள விசுவாசம்' படத்திற்கான செட் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டுடியோவில் தயாராக உள்ளது. வரும் 23ஆம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் திடீர் முடிவால் படப்பிடிப்பு தொடங்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த பின்னர்தான் படப்பிடிப்பு தொடங்கும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர்