திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (11:31 IST)

இம்மாத இறுதியில் வெளியாகிறது 'இமைக்கா நொடிகள்'

டிமான்ட்டி காலனி' படத்தை இயக்கிவர் அஜய் ஞானமுத்து. இவர் அடுத்ததாக  இயக்கியுள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. சைக்கோ த்ரில்லர் படமான இதில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார்.  அனுராக் காஷ்யப் சைக்கோ கொலையாளியாக சிறப்பாக நடித்துள்ளார். 
 
இமைக்கா நொடிகள் படத்துக்கு யு/ஏ சென்சார் சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இமைக்கா நொடிகள் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வெளியிட உள்ளனர். ஏற்கனவே, அந்த தேதியில் ராதாமோகனின் '60 வயது மாநிறம்' படமும் 'அட்டக்கத்தி' தினேஷ் நடிக்கும் 'அண்ணனுக்கு ஜே' படமும் வெளியாக இருக்கிறது. மறுநாள் கார்த்திக் நரேனின் 'நரகாசூரன்' படம்  வெளிவரவிருக்கிறது.