திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Updated : சனி, 30 மே 2020 (18:15 IST)

கொரோனா போர்வீரர்களுக்காக பாடல் உருவாக்கிய இளையராஜா

தமிழகத்தில் கொரொனா வைரஸால் 20,246 பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11313 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 154 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில்  நாளையுடன் 4வது கட்ட பொது  ஊரடங்கு முடிவடையும் நிலையில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மக்கள் கொரொனா காலத்தில் பொருளாதாரத்திற்குப் பெரும் சிரமத்தைச் சந்தித்து வரும் சூழலில் சினிமாப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் கொரோனா போர் வீரர்களான  மருத்துவர்கள், செவிலியர்கள், போலீஸாருக்கு பலரும் தங்கள் நன்றிகளை தெரிவித்து உயிரைப் பணயம் வைத்துச் சேவையில் ஈடுபடும் அவர்களைப்  பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இசைஞானி இளையராஜா கொரோனா போர்வீரர்களுக்காக ஒரு  ’’பாரத பூமி’’ என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார். எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இப்பாடலைப் பாடியுள்ளார்.  இந்தப் பாடல் யூயிடியுப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.