வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மே 2021 (16:57 IST)

இளையராஜா பாடலை இறுதி இசையாகக் கேட்ட நண்பர்… உருக வைக்கும் வீடியோ!

இறந்தவருக்காக அவரின் நண்பர்கள் இளையராஜா பாடலை இசைத்து பாடி இறுதி மரியாதை செய்துள்ளனர்.

நேற்று முதல் பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஒரு வீடியோ அதிகமாக பேர்களால் பார்க்கப்பட்டும் பரப்பப்பட்டும் வந்தது. அந்த வீடியோ ஒரு நபரின் இறுதி சடங்கின் போது எடுக்கப்பட்டது. அதில் இறந்தவருக்காக அவரின் நண்பர்கள் இளையராஜா இசையில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இளமை எனும் பூங்காற்று பாடலை இசைத்து பாடி மரியாதை செலுத்தினார்.

இறந்த அந்த நபர் தான் இறந்துவிட்டால் இளையராஜா பாடலை இசைத்து தன்னை வழியனுப்ப வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக அந்த பதிவில் கூறியுள்ளனர். சம்மந்தப்பட்ட நபர் யார் அவர் எப்படி இறந்தார் போன்ற விவரங்கள் தெரியாவிட்டாலும், அந்த வீடியோ பார்ப்பவர்களை கண்ணீர் விட செய்யும் அளவுக்கு உள்ளது.