ஒரே பாரதிராஜா… ஒரே இளையராஜாதான் – இசைஞானியின் ஜாலி பேச்சு!
இசைஞானி இளையராஜா காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
இளையராஜா மேடைகளிலோ அல்லது பொதுவெளியாக ஜாலியாக பேசும் தருணங்கள் மிகக்குறைவு. ஆனால் ஜாலி மூடுக்குள் சென்றுவிட்டால், அனைவரையும் கவரக்கூடிய அளவுக்கு பேசும் தன்மை கொண்டவர். அப்படி ஒரு நிகழ்வுதான் சமீபத்தில் நடந்த காதல் செய் என்ற படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடந்துள்ளது.
இந்த விழாவுக்கு வந்த பாரதிராஜா மற்றும் பி வாசு ஆகியோர்களை குறிப்பிட்டு பேசிய அவர் எதிர்கால பாரதிராஜா, நிகழ்கால பாரதிராஜா அவர்களே, ஏன் அப்படி சொல்கிறேன் என்றால் ஒரே பாரதிராஜா மற்றும் இளையராஜாதான். எப்படி ஒரே சூரியனோ அதுபோல. ஒருவரை போல ஒருவர்தான். எனக் கூறியுள்ளார்.