1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (18:29 IST)

இளையராஜாவுக்காக திரண்ட திரையுலகம்: பிரசாத் ஸ்டுடியோ முன் தள்ளுமுள்ளு

இளையராஜாவுக்கு ஆதரவாக பாரதிராஜா உட்பட ஐந்து முக்கிய திரையுலக பிரமுகர்கள் பிரசாத் ஸ்டூடியோ முன் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது 
 
இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள ஒரு கட்டத்தில் தனது இசை பணிகளை செய்து வருகிறார். அவருடைய இசை சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களும் அங்குதான் உள்ளன. இந்த நிலையில் திடீரென அந்த கட்டிடத்தை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் மூடியதாக தெரிகிறது. இதற்கு இளையராஜா எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் அந்த கட்டிடத்தை இளையராஜாவுக்காக மீண்டும் திறக்க பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் முன்வரவில்லை என தெரிகிறது 
 
இதுகுறித்து தகவல் அறிந்த பாரதிராஜா உள்பட திரை உலக பிரமுகர்கள் இதில் சமரசம் பேச இன்று மாலை பிரசாத் ஸ்டூடியோ முன் குவிந்தனர். பாரதிராஜா, பாக்யராஜ், சீமான், ஆர்கே செல்வமணி உள்பட பல திரையுலக பிரபலங்கள் பிரசாத் ஸ்டூடியோ முன்பு குவிந்த நிலையில் அவர்களுக்கு பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தினர் உள்ளே நுழைய அனுமதி மறுத்தனர். இதனால் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது 
 
இதனை அடுத்து நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தற்போது பாரதிராஜா உள்பட 5 முக்கிய பிரமுகர்கள் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் இளையராஜாவுக்கு பிரசாத் ஸ்டூடியோவில் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன