1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (16:57 IST)

‘ரஜினி இல்லையென்றால் லாரன்ஸ் இல்லை’ - சுவாரசியத் தகவல்

‘ரஜினி இல்லையென்றால் லாரன்ஸ் இல்லை’ என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தான் டான்ஸராக ஆவதற்கு ரஜினி தான் காரணம், அவர் இல்லையென்றால் தான் இல்லை என ராகவா லாரன்ஸ்  தெரிவித்துள்ளார். “ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்புராயன் வீட்டில் கார் கிளீனராக இருந்தேன். என்னுடைய திறமையை நிரூபிக்க  பலரிடம் வாய்ப்பு கேட்டேன். ஒருநாள் தலைவர் முன்பு டான்ஸ் ஆடிக் காட்டினேன். பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல்  அவரும் போய்விட்டார்.
 
3 நாட்கள் கழித்து திடீரென அவரிடம் இருந்து போன். கார் கிளீன் பண்ணும் வேலையை விட்டுவிட்டு நடனத்தைத் தொடரச் சொன்னார். சொன்னதோடு நிற்கவில்லை, ‘அண்ணாமலை’ படம் பண்ணிக் கொண்டிருந்த சமயம் அது. பிரபுதேவாவை  அழைத்து, என்னை அவர் டீமில் சேர்த்துக் கொள்ளச் சொன்னார்.
 
பின்னர், பிரபுதேவா வீட்டில் இருந்து அழைப்பு வந்தது. ‘ரஜினி சார் உன்னோட டான்ஸைப் பார்த்து வியந்திருக்கிறார். உனக்கு ஒரு பிரேக் தேவை என்று சொன்னார். நாளையில் இருந்து என் டீமில் சேர்ந்துகொள்’ என்றார் பிரபுதேவா. தலைவர் அன்றைக்கு அப்படிச் சொல்லவில்லை என்றால், இன்றைக்கு நான் கிடையாது” எனத் தெரிவித்துள்ளார் ராகவா லாரன்ஸ்.