1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (19:27 IST)

அட்லீயை வைத்து செய்த இருட்டு அறையில் முரட்டு குத்து டீம்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் இயக்குநர் அட்லீயை கேலி செய்து காட்சி அமைத்துள்ளனர்.

 
சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இதில் கவுதம் கார்த்திக் நடித்துள்ளார். இந்த படம் குறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். 
 
தமிழ் திரையுலகை சேர்ந்தவர் பலரும் இயக்குநரை மோசமாக விமர்சித்துள்ளனர். ஆனாலும் திரையரங்கில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த படம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை படைத்துள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த படத்தை விரும்பி பார்க்கின்றனர். இந்நிலையில் படத்தில் இயக்குநர் அட்லீயை கேலி செய்து ஒரு காட்சி அமைந்துள்ளது.
 
ஊருக்குள்ள எவனோ ஒருத்தன் மௌன ராகம், சத்திரியன் படத்துக்கு ராஜா ராணி, தெறி-னு பேரு வெச்சானாம் என்ற வசனம் இடம்பெறுகிறது. இந்த வசனத்தை ஒருவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.