திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Abimukatheesh
Last Updated : புதன், 22 நவம்பர் 2017 (22:21 IST)

அதற்கு சம்மதித்திருந்தால் நானும் லேடி சூப்பர் ஸ்டார்தான் - ராய் லட்சுமி

பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்திருந்தால் நானும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என்று ராய் லட்சுமி கூறியுள்ளார்.


 
ராய் லட்சுமி முதல்முறையாக பாலிவுட்டில் ஜூலி-2 படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் தமிழிலும் வெளிவருகிறது. இதில் அவர் படுகவர்ச்சியாக நடித்துள்ளார். நடிகையை மையமாக கொண்ட கதை என்பதால் படத்தில் கவர்ச்சி தேவைப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் ராய் லட்சுமி நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
நான் படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருப்பதாக ரசிகர்கள் மத்தியில் தகவல் பரவி வருகிறது. ட்ரெய்லரை பார்த்தால் அப்படிதான் தோன்றும். முழு படத்தையும் பார்ப்பவர்களுக்கு என் கதாபாத்திரம் மீது அனுதாபம் வரும்.
 
சமீபகாலமாக சினிமாவின் பாலியல் புகார்கள் அதிகரித்து வருகிறது. படுக்கையை பகிர்ந்து கொண்டால்தான் பட வாய்ப்புகளை பெற முடியும் என சில நடிகைகள் துணிச்சலுடன் சொல்லி வருகிறார்கள். தமிழில் கற்க கசடற படத்துக்குப் பின் புதிய பட வாய்ப்புகள் வரவே இல்லை. 
 
4 ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. அப்போதுதான் மறைமுகமாக அனுபவம் ஏற்பட்டது. பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்து போகும்படி கூறினர். நான் அதற்கு சம்மதிக்கவில்லை சம்மதித்து இருந்தால், லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன் என்று கூறினார்.
 
இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.