வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 17 ஜனவரி 2022 (17:30 IST)

‘உன்னை காணாது நான் இன்று நானில்லையே’- கமல் டுவிட்

இந்தியாவில் புகழ்பெற்ற நடனக்கலைஞர் பிர்ஜு மகராஜ். இவர் இன்று மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், புகழ்பெற்ற நடனக்கலைஞர் பண்டிட் பிர்ஜூ மகராஜ்  மறைவுக்கு  தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்  இரங்கல் பதிவிட்டுள்ளார். அதில்,

ஈடு இணையற்ற நடனக் கலைஞரான பண்டிட் பிர்ஜூ மகராஜ் மறைந்தார்.ஓர் ஏகலைவனைப் போல பல்லாண்டுகள் தொலைவிலிருந்து அவதானித்தும்,விஸ்வரூபம் படத்திற்காக அருகிருந்தும் நான் கற்றுக்கொண்டவை ஏராளம்.இசைக்கும் நாட்டியத்திற்கும் தன் ஆயுளை அர்ப்பணித்துக்கொண்டவரே, ‘உன்னை காணாது நான் இன்று நானில்லை ‘ எனத் தெரிவித்துள்ளார்.