ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 29 நவம்பர் 2017 (12:14 IST)

இனிமேல் இப்படி ஒரு படத்தை எடுக்கவே மாட்டேன்: பிரபல இயக்குநர் ஓபன் டாக்

கார்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் தான் விட்ட இடத்தை பிடித்துவிட்டார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. தீரன் படத்தின் மூலம் மீண்டும் வெற்றிக்கொடி நாட்டியவர் இயக்குநர் வினோத். இவரின் முதல் படமான சதுரங்கவேட்டையும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
காவல்துறை சம்மந்தபட்ட படமாக இருந்தாலும் வித்தியாசமான கதை என்பதால்தான் இந்தப்படம் வெற்றிப் படமாக அமைய முடிந்தது. இந்தப் படத்தை பார்த்து விட்டு காவல் அதிகாரிகள் பலரும் பாராட்டினார்கள். இதை தொடர்ந்து தீரன் படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, கார்த்தி திரைப்பயணத்திலேயே இவை மிக முக்கியமான படமாகவும்  கருதப்படுகின்றது.
 
இந்த நிலையில் இப்படத்திற்கு என்னதான் நல்ல விமர்சனம் வந்தாலும், வினோத் மனதை காயப்படுத்தும்படி இவர் ஒரு சில மக்களை தவறாக காட்டிவிட்டார் என்று கருத்துக்கள் நிலவியதால், வினோத் மன்னிப்பு கேட்டது மட்டுமின்றி இனி தீரன் போல் ஒரு படத்தை எடுக்க மாட்டேன் என்றும் வருத்தத்துடன் கூறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.