1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 5 டிசம்பர் 2022 (09:49 IST)

பாக்ஸ் ஆஃபிஸ் புள்ளிவிவரங்கள்… பிழைப்புக்காக ஏதாவது பேசுகிறார்கள் – ஹெச் வினோத் காட்டம்!

இயக்குனர் ஹெச் வினோத் தற்போது அஜித்தின் துணிவு படத்தின் இறுதி வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்.

அஜித் ஹெச் வினோத் கூட்டணியின் மூன்றாவது படமாக துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. வங்கி மாதிரி போடப்பட்ட செட்டில்தான் H வினோத் பெரும்பாலான காட்சிகளை படமாக்கினார். இந்த படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளனர்.

இந்த படம் பற்றிய தகவல்களை இதுவரை மிகவும் ரகசியமாக வைத்திருந்த நிலையில் இப்போது ஹெச் வினோத் துணிவு படம் பற்றி பல தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதில் படங்கள் பற்றி ஆன்லைன் ட்ராக்கர்ஸ் வெளியிடும் பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் பற்றி கருத்து தெரிவித்த அவர் “பலரும் தங்கள் பிழைப்புக்காக பொய்யான பாக்ஸ் ஆபிஸ் தகவல்களை சொல்கின்றனர். ஆனால் அவர்களை சொல்லியும் குற்றமில்லை. அவர்கள் பிழைப்பு அது” எனக் கூறியுள்ளார்.